வாழ்க வாழ்க வாழ்க என்றும் வாழ்கவே
வான் புகழ் திரேசாக் கல்விச் சாலையே
எட்டுத் திக்கும் புகழ்மணக்க வாழ்கவே
தலைகொட்டும் மழை மேகமென பொழியவே.
இறையன்பு சேவையூடன் பிறரையூம்
தூய நிறையூடன் அன்பாக போற்றிடவே
கண்ணியமாய் கடமையில் கட்டுண்டு
உண்மை, நேர்மை, அழகுடனே பழகுவோம்.
                                                          (வாழ்க..............)

நீலக்கடல் வாவியோரம் உதித்தனை
ஞானம் புகழ் கன்னியர் கைவளர்ந்தமை
தாயெனவே அனாதைகளை அணைத்தமை
தூயவர்களாய் வாழும்படி வகுத்தனை.
                                                          (வாழ்க..............)

தேமதுர தமிழினோடு ஆங்கிலம்
இங்கு தேவைக்கேற்ற சிங்களமும் கற்றுமே
வானுயர தொழில் முறையூம் பயிலுவோம்
வானுயரின் ஞானங்களை உணருவோம்.
                                                          (வாழ்க..............)